We neeed Your Help!
எமதுசமூகம்
எமது மண்ணையும் மக்களையும் வளப்படுத்தி அவர்களை கல்வி,பொருளாதார, சுகாதாரத்தில் மேம்படுத்தி கல்வியறிவுள்ள ஆரோக்கியமான தமிழர் சமுதாயத்தை உருவாக்கும் உயர்ந்த நோக்கில் 2016இல் இலங்கையில் வாழும் துறைசார் கல்விமான்களால் உருவாக்கப்பட்டதே “எமதுசமூகம்”.
தமிழர் வாழும் மாவட்டங்களில் நலிவுற்ற கிராமங்களிலுள்ள வளம் குறைந்த 57 பாடசாலைகளில் ஆரம்ப கல்விமேன்பாடு,15 தமிழர் கலாசார வகுப்புகளையும், பெண்கள் /இளைஞர் தலைமைத்துவம், இது வரை 28 மருத்துவமுகாங்களை நடத்தியதுடன், வாழ்வாதார உதவிகளை வழங்குவதுடன் 2019 முதல் பல்கலைக்கழக படிப்பினை தொடர முடியாத வளம் குறைந்த 80 மாணவர்களையும் இணைத்து மாதாந்தம் நிதியுதவி வருகின்றோம்.
Covid19அசாதாரண சூழலில் OL பாடங்களுடன் உயர்தரமாணவர்களுக்கான,ICT,English வகுப்புகளையும் Zoom மூலமாக நடத்தியிருந்தோம். மேலும், வடக்கு கிழக்கில் சுமார் 5000 வருமானமற்ற குடும்பங்களுக்கான உலர்உணவு பொதிகளை வழங்கியதுடன் கிழக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு 75 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கி கழுவாஞ்சிகுடி மருத்துவமனை வளாகத்தில் Oxygen generating plant இற்குரிய கட்டிடம் கட்டப்பட்டு அது தற்போது வெற்றிகரமாக இயங்கிவருகின்றது.
மற்றும் வகுப்பறை பற்றாக்குறையான பாடசாலைகளான கதிரவெளி, திராய்க்கேணி, தாண்டியடி பாடசாலை கட்டிடங்களை திருத்தி மெருகுபடுத்தியதுடன் புல்லுமலை கத்தோலிக்க பாடசாலை, பதுளை அயிஸ்லெபி பிட்ரத்மலை வித்தியாலயம், வேல்கின்ன தெமோதர பாடசாலையில் கட்டிடங்களையும் கட்டிக் கொடுத்துள்ளோம். விளையாட்டு உபகரணங்களை பாடசாலைகளுக்கு வழங்கி அவர்களது உடல்,உளவளத்தை மேம்படுத்திவருகின்றோம்.
2023 O/L பரீட்சையில் கணிதபாடத்தில் சித்திபெற கிழக்குமாகாண கல்வி பணிப்பாளரால் அடையாளப்படுத்தப்பட்ட 6000 மாணவர்களுக்கு கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் யாழ் இந்துக்கல்லூரி 1992 A/L பழைய மாணவர்களது பங்களிப்புடன் 19 செயலமர்வுகளை நடத்தியிருந்தோம். இலங்கை, மற்றும் கனடா, அமெரிக்கா, லண்டன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் எமதுசமூகம் சிறப்பாக இயங்கி வருகின்றது.
எவ்வித அரசியல் சார்பின்றி விளம்பரமின்றியும் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக எமக்குரிய “எமது சமூகம்” WhatsApp குழுவில் எமது செயற்பாடுகள் பதிவிடப்படுகின்றது. எமதுசமூக உறுப்பினர்கள் முற்றிலும் தொண்டர்களாக களப்பணியாற்றுகின்றனர். வெளிப்படை, உண்மை, நேர்மை, சுயநலமற்ற களப்பணி இவற்றை உறுதியாகக் கடைப்பிடிக்கும் எமது சமூகத்துடன் தமிழா் வாழும் நாடுகளில் சில அமைப்புகளும் எம்மோடு இணைந்து பயணிக்கின்றன.
நீங்களும் “எமது சமூகம்” அமைப்புடன் இணைந்து உங்களது பங்களிப்பினை வழங்கி எம்மோடு செயற்பட அன்போடு அழைக்கின்றோம்
